தினமும் உனக்கு தர
பூக்களை தேடினேன்
ஆழகிய பூ எது ?
அதிசய பூ எது ?
வாடாத பூ எது ?
வாசம் நிறைந்த பூ எது ?
யாரும் பார்த்திடாத பூ எது ?
அந்த இறைவனும் அறியாத பூ எது ?
தவம் செய்து பார்தேன்
பலன் கிடைத்தது இன்று
கண்களை மூடி
கால்கள் செல்லும்
பாதையில் நடந்தேன்
பூக்களை தேடி தேடி
அலைந்தேன்
பல ஆயிரம் மைல்கள்
கடந்து வந்தேன்
அதிசயம் என்ன - உன்
வீட்டு வாசல்
நான்
வந்தது என்ன
பிறகுதான் புரிந்து கொண்டேன்
நான் தேடிய பூ
உன் சிரிப்பு தானே
No comments:
Post a Comment