விடுமுறைக்காய் காத்திருகின்றேன்

ஜன்னலோர காற்றிடம்
தினமும் கேட்டுக்கொள்கின்றேன்
நீ நலமா என்று ...!

அந்திவேலை நெடுதூர நடையின் போது

உன்னுடன் நான் சண்டையிட்டு
வாசலில் வந்து தனிமையில் அழும்.,
உன்னையும் அழவைத்த நியாபகங்கள் ...!

எதிர் வீட்டு குழந்தைக்கு முத்தமிடும் போதும் ,

சோறூட்டும் போதும் ,
எதிரெதிராய் நின்று செல்ல சண்டையிடும் போதும்
உன் நினைவுகள் என்னை கொன்று தின்னும்...!

சுற்றித்திரியும் பறவைகளை பார்க்கும்போதெல்லாம்

நினைத்துக்கொள்கின்றேன் .,
இவைகளை போல் தான் நீயும் என் வாழ்விற்கென
அங்கே பறந்து திரிகின்றாய் ..!
தள்ளாமையிலும் தளராமல் ....!

இரவுநேரம் வந்துவிட்டால்

எட்டி ஓடி இரு நடையில்
கட்டிப்பிடிப்பேன் உன்னை .,
எனக்கு இருட்டென்றால் பயம் என்று .!
இன்று தலையணை பிடித்தபடி தனிமையில் ..!

மீண்டும் கிடைக்காதா என்று

தினம் தினம் ஏங்கித்தவிக்கின்றேன்
உன் மடி உறக்கத்திற்க்காய் ...!

ஊரே கூறும் நான் வாயாடிப்பிள்ளை என்று.,

நீயோ ...!
"எம்பிள்ளை எம்புட்டு அழகா பேசுது "
என்று பேசச்சொல்லி கேட்டுக்கொண்டிருப்பாய்..!
ஆனால்.,
இன்று உன்னுடன் அரைமணி நேர உரையாடல்
கூட அரிதாகிவிட்டது...!

பள்ளி சென்று வீடு திரும்புகையில்

"எம்புள்ள நடந்துள்ள வந்திருக்கு "
என்று நீ கால் தடவும் சுகத்தை இன்று
இழக்கிறேன்...!

உன் கொஞ்சல் மொழிகளும் ,

சில கெஞ்சல் மொழிகளுமின்றி
தனிமையில் நான்...!

என் முதல் கவிதை கிறுக்கலை

ரசித்தது நீ!
என் முதல் வாசகி நீ !
இன்று வெகு தொலைவில் நீ !

படித்துவிட்டேன் பட்டனம் போகின்றேன் பணிக்காய் என்று பகட்டாய் கிளம்பி வந்துவிட்டேன்

உன் பாசத்தை இழப்பதை அறியாமல்...!

பிரிவின் வலியினை

தினமும் உணர்கின்றேன் ...!

ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களுக்காய் காத்திருகின்றேன் .,

அம்மா !!!! என்று உன்னை வந்து கட்டிக்கொள்வதற்காய்.....!!!!

No comments:

Post a Comment