சந்தித்த வேளையில்...
சந்தித்த வேளையில்
பகிர்ந்துகொண்ட உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய் அமைந்தது
நமது எதிர்பாரா நட்பு!
காலம் காலமாய்
உணவூட்டி கல்வி புகட்டி
நல்வழி காண்பித்த பெற்றோர்களை
மறத்தல் மாண்பாகுமா?
பின்தொடர்தலும்
காத்திருத்தலும்
காதலின் அத்தியாயங்கள்
என்றிருப்பின் முடிவுரை எங்கே?
என்னுடன் இணைவதே
இந்த பொன்னுடல் பெற்ற பேரெனில் ...
சுற்றம் மறந்து பயணித்தல்
உடன்போக்காகிவிடும்!
இந்த இனிய நட்பு
ஒரு இலக்கியக் காதலின்
முகவுரையாகட்டும்....
நட்புடன் இனி பிரிவோம் சந்திப்போம்!
விதவை
அன்று ஆறுதல் சொன்னவர்கள் கூட
அழைப்பதில்லை அவரவர் இல்ல
சுபகாரீயங்களுக்கு
விஷேசங்களுக்கு விரோதியாய்
துலங்கும் மங்கலங்களுக்கு தூரமாய்
ஒரு மூலையில் ஒதுங்குகிறாள்
அந்த வெள்ளை மலர்!!
நச்சு தின்ற சிலர் எச்சி துப்பும்
ஒன்று இந்த விதவை கலாச்சாரம்
மிஞ்சிய சமுதாயமாவது மாறிவிடுங்கள்
பிஞ்சிலே பிழை படுபவரை பிழைக்க விடுங்கள்
காதும் காதும் வைத்தவாறு கொன்று விடுங்கள்
இல்லையேல் இந்த விதவை என்ற வார்த்தையை வேற்று கிரகத்திற்கு விற்றுவிடுங்கள்!!!
நியாயமா ?
பெண்ணே ...
ஆழ்கடலில் மூழ்கினேன்
முத்தெடுத்தேன் !
படிப்பில் மூழ்கினேன்
பட்டம் வென்றேன் !
சிந்தனையில் மூழ்கினேன்
சிகரத்தை அடைந்தேன் !
கற்பனையில் மூழ்கினேன்
கவிதைகள் எழுதினேன் !
காதலில் மூழ்கினேன்
கல்லறையை அடைந்தேன் !...
சந்தோசம் ...
என்னவளே
படிப்பறிவு இல்லாத - என்னை
பகுத்தாய்வு செய்ய வைத்தாய்
உன் காதலினால் !
பண்பாட்டிலும் மற்றவர் பாராட்டிலும்
சிறந்தவனாக செய்தாய்
உன் காதலினால் !
காதல் செய்த - உன்னை
கரம் பிடிக்க நினைத்தேன்
நம் காதலுடன் - ஆனால் ?
என் கண்ணில் நீர் சுரக்க
என் முன் வந்து நின்றாயே
உன் கணவருடன் !...
சந்தோசம் ...
வாழ்கை மேடை !
வாழ்கை என்பது ஒரு
குத்து சண்டை மேடை !
நீ கீழே விழுந்து தோற்ப்பது
என்பது முடிவல்ல !
நீ விழுந்தும் எழுந்து நிற்க
மறுப்பதே முடிவு !
உன் காதல் எனக்கு வேண்டாம்
நான் உன்னை நினைத்தால்
எனக்குள் இருக்கும்
என் நட்பை மறக்க சொல்கிறாய்...
உயிரா?
உடலா?
என்று நீ கேட்டால்...
என்னால் பதில் சொல்ல முடியாது...
நட்பா காதலா என்று கேட்டால்...
நான் நட்புதான் என்பேன்...
நானும் என் நட்பும் வேறல்ல...
என் நட்பை நான் வெறுத்தால் தான்
உன் காதல் எனக்கு என்றால்...
உன் காதல் எனக்கு வேண்டாம்...
காலமெல்லாம் நான்
உன்னோடு வாழ்வதை விட ...
என் நட்போடு நான் வாழும்
அந்த நாட்களே போதும்...
என்னை மறந்துவிடு...
GOOD BYE .....
தூங்கட்டும் துப்பாக்கிகள்
பிஞ்சுகள் மனதில் நஞ்சு..,
ஏடெடுத்து பயிலும் காலம் மாறி,
ஏங்குகின்றன எந்திரத்தை ஏந்திசெல்ல!
இளைஞர்களின் உள்ளத்தில்
இடிமுழக்கம்!
காதலுக்கு கூட
தூதாக துப்பாக்கியா!
இனியாவது தூங்கட்டும் துப்பாக்கிகள்!
வன்முறையின்
வாயிலிலே
வெறியோடு சிரிக்கின்றன
துப்பாக்கி பூக்கள்...!
கண்ணிமைக்கும் நேரத்தில்,,
எல்லையிலே
கன்னிவெடியோடு
கரம் கோர்க்கின்றன துப்பாக்கிகள்!
எதிரிகளை
அழிக்கவா?
பெருக்கவா?
வினாவிற்கு விடையாக
இனியாவது தூங்கட்டும் துப்பாக்கிகள்!
தீவிரவாதிகளை ஒழிக்க!
தீவிர வாதம்
செய்கிறார்கள்...
ஆயுதத்தை
ஆயுதத்தால்
அழிப்போமென்று!
அகிம்சையை போதித்த
அண்ணல் காந்தியின்
இதயத்தை துளைத்தது
கோட்சேவின் துப்பாக்கி!
அன்னை இந்திராவின்
உடலை சல்லடையாக்கிய
பாதுகாவலனின் துப்பாக்கி!
பெனசீர் புட்டோவையும்
விரட்டியதே...
அய்யகோ..!
இவ்வவலம்
தொடராமல்
தூங்கட்டும் துப்பாக்கிகள்!
பொய் நிழல்கள்
பொக்கிசமாகவே
சேமித்தேன் வார்த்தைகளின்
மிச்சமெல்லாம்
அமுது என்று எண்ணியே
குடித்தேன்
விழிகளெல்லாம் விஷம்
வடிவதுகூடத்தெரியாமல்
அன்மான உள்ளங்களை
படைத்து என் அழுக்காக்கினாய்
இறைவா,,,,
என் நாட்களில்
உன்னை தேடிவந்த
நிமிடங்கள்தான் அதிகம்
மனசு விட்டுச்சிதறிய
கனவுகளெல்லாம்
கொட்டு வைக்க வேண்டும்
தாயின் மடி மீது,,,,,,
இளமையின் விளிம்பிலே
உணர்வுகள் தொலைத்து
தடிக்கி விழுந்த
தடவைகள் கோடி,,,,,
விழிகளுக்கு திரையிட்டு
தூர நின்று நலம் விசாரித்த
அவர்களை,
உடைந்த மனசு இன்னுமே
உயிரோடு கோர்க்கிறது
வானம் கிழித்து
வாழ்கை பற்றி
வரைந்து முடித்தேன்
கசிந்து போன கனவுகள்
கதவை உடைத்துப்போனாது
தொப்புள் கொடியோடு தொடங்கிய
ஊமைக்கனவுகள்
கொஞ்சமும் சிரிக்காமலே
சிதறிப்போனது
அந்த நொடிகளெல்லாம்
நிஜங்களாகவே நெஞ்சை
துளைக்கும் நினைவுகளோடு
அவர்களும்
பொய் நிழல்களாகவே என்னோடு
வாழ்கிறார்கள்,,,,
காதல் உணர்வுகள் (Feelings of Love)
உடலோடு இருக்கும்போது
உயிர் பெரிது,
உயிரோடு இருக்கும்போது
உணர்வு புதிது,
உணர்கின்ற போது
உள்ளம் எளிது,
உள்ளத்தில் உன்னை நினைக்கும்போது
காதல் இனிது...
உயிர் பெரிது,
உயிரோடு இருக்கும்போது
உணர்வு புதிது,
உணர்கின்ற போது
உள்ளம் எளிது,
உள்ளத்தில் உன்னை நினைக்கும்போது
காதல் இனிது...
Subscribe to:
Posts (Atom)

