அழகை கண்டு மயங்கி
கொண்டு திரியும்
ஆண் பெரு மக்களே
அவசியம் எண்ணி பாருங்கள்
அவர் அவர் தங்கையையும்
காதல் போதையில்
பெண் மலர்களை
கசங்கிவிட விட செய்யும்
கல் நெஞ்ச காரர்களே - கல்லெறி
உங்களுக்கும் காத்திருக்கிறது
உயிரையும் கொடுப்பேன் என்று
சிங்கிள் டீக்கு பிச்சை எடுக்கும்
அசிங்கமான காதல் செய்யும்
கபோதிகளே! கண்ணியமான - காதலை
களங்க படுத்தாதீர்கள் ..
தாய்க்கு பாரமாய் இருந்து
தாரத்தை உதாசீன படுத்தும்
தரங்கெட்ட மனிதர்களே
தங்களை தாக்க போகும்
தரணியின் பிணி அறியுமோ !!
இனியாவது மாறுங்கள்
மானுட பிறவியில்
மகத்துவ மான மங்கையரை
மதித்திட முன் வாருங்கள்
தங்கள் துணையுடன்
உறுதுணையாய் இருந்திடுங்கள் .
No comments:
Post a Comment