மறைக்கப்படும் தீர்ப்பு

மரணத்தின் வாயிலை
முட்டி மோதி
திறக்க முடியாமல்
மீண்டும் வந்துள்ளேன்...
இந்த ஒருதலைக் காதலன்
வாழ்க்கையை வாழ

என் உயிரை
உனக்கு உயிலெழுதியப் பின்பு
தற்கொலையெனும்
தவறான முடிவை எடுத்துவிட்டேன்
என்னை
மன்னித்துக் கொள் பெண்ணே

காதலில்லை என்று
நீ கூறிவிட்டாய்
உன்னை கண்டபோது
உடைந்ததை விட
இன்னும் சுக்குநூறாய் உடைந்துபோனது
என் இதயம்...

மனதினில்
காதலை வைத்து...
கண்களில்
அதை வெளிப்படுத்தி...
உதட்டின் நுனியில் மட்டும்
ஏன் அதை மறைக்கிறாய்..???

பெண்ணே!
உன் காதலை
மறைக்க நினைத்தால்
என்னைக் காணும்போது
உன் உதடுகளை திறக்காதே...
விழிகளை மூடிக்கொள்
வசதியாக இருக்கும்