பாடம்....

காதலித்துக்கொண்டு
இருப்பவர்களுக்கு எல்லாம்
பாடம் கற்பிக்கப்பட்டு கொண்டு
இருக்கிறது.....!

தோல்வி கண்டவர்க்கு

எல்லாம்.... பரீட்சைகள்
நடந்துகொண்டு
இருக்கிறது....!

இங்கே வினாக்கள்

உண்டு....!

அங்கே விடைகள் மட்டுமே..!!

தயக்கம்.....

நிச்சயம் நீ
என்
எதிர்பார்ப்புகளுக்கெல்லாம்
அப்பாற்பட்டவள்
என்று
எண்ணுவதால் தானோ
உன்னை
எதிர்கொள்ளவே
தயங்குகிறேன்!

வேதனை

பஞ்சத்தால் வரும் வேதனை கூட
பரிதவிகின்றது ..
உன் நெஞ்சத்தில் தஞ்சம் கொள்ள
தகுதி இல்லாத
என்னை பார்த்து...

நட்பின் பிரிவு

எல்லோரும் அடைவது
காதல் தோல்விதான்
முதல் முறையாக
நான் அடைந்தேன்
நட்பில் தோல்வி!


என்னையும் நீயாக உணர்வாய்

என்று நான் நம்பினேன்
நீ பலவற்றை உணர்ந்தவன்
என்பதை அறியாமல்…


எனது நட்பின் ஆழம் அதிகம்

என நான் நம்பினேன்
உனது நட்பின் அகலம்
என்னவென்று அறியாமல்…


நான் யாரிடமிருந்தும்

சிரிப்பை பெற்றதில்லை…
எப்பொழுதும் சிரித்துக்
கொண்டே இருப்பதால்
அதில் எனக்கு பஞ்சமில்லை.

முதல் முறையாக உன்னிடமிருந்து

அழுகையை பெற்றேன்

அது என்னிடம் இல்லாமல்

இருந்ததால்…

நல்லதோ…

கெட்டதோ…
பிரிவின் சோகம்
என்பது எனக்கு மட்டும்தானே!

உயிர் நண்பன்

நண்பனே!
நட்பிற்கு அர்த்தம் கேட்டால் நீ என்பேன்
அதன் விரிவாக்கம் கேட்டால் உன் பெயர் சொல்வேன்
நீ என் வாழ்வின் கடைசி வரை வருபவன் அல்ல
என் இறப்பின் தொடக்கம் வரை
என்னை உறவாய் நினைக்கும்
என் உயிரில் கலந்தவனே
என் வெற்றியின் முதல் பாராட்டுகள் உனதே
என் தோல்வியின் முதல் ஆறுதல் உனதே
தாயை போல அன்பை காட்டினாய்
தந்தையை போல பாசம் காட்டினாய்
மனைவியாய் போல நேசம் காட்டினாய்
வேறென்ன வேண்டும் எனக்கு
உன்னை போல நண்பன் கிடைத்த பிறகு

கல்லறை கவிதை !

கவிதைகள்
காதலால் வரலாம்

காதல்

போராட்டங்களில்
வலிகளை கவிதையாக
சொல்லலாம்

இதயங்களின்

போராட்டங்களில்
கண்ணீர் பிறக்கலாம்

இதயங்கள் சேர்ந்தால்

கண்ணீர்த்துளியும்
ஆனந்தகண்ணீர்
ஆகலாம் !

ஆனால்

இதயங்கள் உடைந்தால்
கண்ணீரும்
கவிதைகளும்
கல்லறை என்னும்
அசையா இதயத்தில்
தஞ்சம் அடையும் !

நேற்றைய நட்பு நம் மனதில் நினைவாய்;
இன்றைய நட்பு நம் இதயத்தில் துடிப்பாய்;
நாளைய நட்பு நம் மனதில் கணவாய்;

கடந்து விட்டன நாட்கள்-கல்லூரி தாயின் கருவில் பாதுகாப்பாய்;

கற்று கொண்டது பாடங்கள் மட்டும் அல்ல பாசங்களும் தான்;
புதிய பாதையில் பிரிய போகிறோம் நம் கனவை நிறைவேற்ற;

பாத சுவடுகள் அல்ல நம் நட்பு;பந்தங்களை

வளம் வருவது தான் நம் நட்பு
இதோ பிரியும் தருணம் இது இருப்பினும் என்றும் நண்பர்களாய் பிரியாமல் இருக்க முயற்சிப்போம்......

ஒவ்வொரு நாளும்....

ஒவ்வொரு நாளும்
விடிகிற பொழுது....ஆயிரம்
கேள்விகளுடன் தான்
பொழுது மலர்கிறது...!!

நாம் ஒருசில

பதில்களை சொல்லிவிட்டு
ஒவ்வொரு நாளும்
கேள்விகளை வளர்த்துக்கொண்டு
வாழ்கிறோம்...!!!

பொய்

இருட்டுக்குள் இருக்கும்
ஒரு தீக்குச்சியின் வெளிச்சம்
அது ...............

அனைத்தையும் மறைத்து

தன்னை அழகாய் காட்டும்
அது ...............

புத்தகப் புதையல்

அடக்கம், அடக்கம்!
கைக்குள் அடக்கம்,
இவுலகம் கைக்குள் அடக்கம்,
நிலையான அடக்கம் கொடுக்கும்,
இது ஏழு உலகங்களையும் கடக்கும்,
புதியதோர் இனம் படைக்கும்,
சினம் துறந்த ஏழாம் அறிவு கொடுக்கும்.
இதயம் கூடுதலாய் துடிக்கும்
பல காலம் கூடுதலாய் துடிக்கும்.
பொல்லாத வினையை அறவே தடுக்கும்.
எந்த யுகத்திற்கும் ஏற்ற வியாபாரம்
ஆம் நான் கண்ட நட்டமில்லா ஒரே வியாபாரம்.
அல்ல அல்ல பெருகுமாம்,
கொடுக்க கொடுக்க செழிகுமாம்.
எழுதுகோல் மை உமிழ
எழுத்தர் கற்பனை மழை பொழிய
கருத்துகள் கவிதையை நீந்த
காகித மரங்கள் செழித்து வளர
மனிதன் கண்ட அற்புத புதையல்
-புத்தகப் புதையல்

விடுமுறைக்காய் காத்திருகின்றேன்

ஜன்னலோர காற்றிடம்
தினமும் கேட்டுக்கொள்கின்றேன்
நீ நலமா என்று ...!

அந்திவேலை நெடுதூர நடையின் போது

உன்னுடன் நான் சண்டையிட்டு
வாசலில் வந்து தனிமையில் அழும்.,
உன்னையும் அழவைத்த நியாபகங்கள் ...!

எதிர் வீட்டு குழந்தைக்கு முத்தமிடும் போதும் ,

சோறூட்டும் போதும் ,
எதிரெதிராய் நின்று செல்ல சண்டையிடும் போதும்
உன் நினைவுகள் என்னை கொன்று தின்னும்...!

சுற்றித்திரியும் பறவைகளை பார்க்கும்போதெல்லாம்

நினைத்துக்கொள்கின்றேன் .,
இவைகளை போல் தான் நீயும் என் வாழ்விற்கென
அங்கே பறந்து திரிகின்றாய் ..!
தள்ளாமையிலும் தளராமல் ....!

இரவுநேரம் வந்துவிட்டால்

எட்டி ஓடி இரு நடையில்
கட்டிப்பிடிப்பேன் உன்னை .,
எனக்கு இருட்டென்றால் பயம் என்று .!
இன்று தலையணை பிடித்தபடி தனிமையில் ..!

மீண்டும் கிடைக்காதா என்று

தினம் தினம் ஏங்கித்தவிக்கின்றேன்
உன் மடி உறக்கத்திற்க்காய் ...!

ஊரே கூறும் நான் வாயாடிப்பிள்ளை என்று.,

நீயோ ...!
"எம்பிள்ளை எம்புட்டு அழகா பேசுது "
என்று பேசச்சொல்லி கேட்டுக்கொண்டிருப்பாய்..!
ஆனால்.,
இன்று உன்னுடன் அரைமணி நேர உரையாடல்
கூட அரிதாகிவிட்டது...!

பள்ளி சென்று வீடு திரும்புகையில்

"எம்புள்ள நடந்துள்ள வந்திருக்கு "
என்று நீ கால் தடவும் சுகத்தை இன்று
இழக்கிறேன்...!

உன் கொஞ்சல் மொழிகளும் ,

சில கெஞ்சல் மொழிகளுமின்றி
தனிமையில் நான்...!

என் முதல் கவிதை கிறுக்கலை

ரசித்தது நீ!
என் முதல் வாசகி நீ !
இன்று வெகு தொலைவில் நீ !

படித்துவிட்டேன் பட்டனம் போகின்றேன் பணிக்காய் என்று பகட்டாய் கிளம்பி வந்துவிட்டேன்

உன் பாசத்தை இழப்பதை அறியாமல்...!

பிரிவின் வலியினை

தினமும் உணர்கின்றேன் ...!

ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களுக்காய் காத்திருகின்றேன் .,

அம்மா !!!! என்று உன்னை வந்து கட்டிக்கொள்வதற்காய்.....!!!!

பெண் சிசு !

நான் குப்பைதொட்டில்
பிறக்க கடவுள்வரம்
கொடுத்தாரா ?
இல்லை
என்னை பெற்றவளை
இதயம் இல்லாமல்
படைத்தாரா?

என்னை ஒரேமாத்திரையில்

புதைத்திருக்கலாமே !

பிறந்தவுடன் என்னை

கடவுளுக்கு பரிசாக
கொடுத்திருக்காலமே

நீ தான்

குப்பைஎன்றால்
என்னையும் பிறந்தவுடன்
குப்பைதொட்டிக்கு
இரையக்கிவிட்டாயே!

நான் தேடிய பூ

தினமும் உனக்கு தர
பூக்களை தேடினேன்

ஆழகிய பூ எது ?

அதிசய பூ எது ?
வாடாத பூ எது ?
வாசம் நிறைந்த பூ எது ?
யாரும் பார்த்திடாத பூ எது ?
அந்த இறைவனும் அறியாத பூ எது ?

தவம் செய்து பார்தேன்

பலன் கிடைத்தது இன்று

கண்களை மூடி

கால்கள் செல்லும்
பாதையில் நடந்தேன்

பூக்களை தேடி தேடி

அலைந்தேன்
பல ஆயிரம் மைல்கள்
கடந்து வந்தேன்

அதிசயம் என்ன - உன்

வீட்டு வாசல்
நான்
வந்தது என்ன

பிறகுதான் புரிந்து கொண்டேன்

நான் தேடிய பூ
உன் சிரிப்பு தானே

ஜாக்கிரதை ....!!!!

அழகாய் இருக்கும்
பெண்களை விட....
தான் அழகு என்ற நினைப்பில்
அலையும் பெண்களிடம்.... நண்பா
நீ ஜாக்கிரதையாக
இரு....!!!!

நீயே சொல்.......

உனக்கான கவிதைகளை
மட்டும் தான் நான்
அலங்கரிக்க ஆசைப் படுகிறேன்....

வருகின்ற கனவுகளை

எல்லாம் நான் கண்டதில்லை
நீ வரும் கனவைத் தவிர.....

நீ காட்டிய திசையில் கண்ணைக்

கட்டிக் கொண்டு போகலாம்
நீ இல்லாத திசையில் யாரை
கூட்டிக் கொண்டு போவது.....

எனக்கு தெரிய

வேண்டியதெல்லாம் ஒன்றுதான்....
நான் காதலித்தேன் என்பது
உண்மை!
'உன்னால் காதலிக்கப்பட்டேனா"?.......

காதல் மொழி...

உன்னோடு
காதல் சொல்ல
வரும் போதுதான்
மவுனம் எனும்
புது மொழியினை
கற்று கொண்டேன்...

காதல் தோல்வி

பிடிக்கவில்லை என்று சொல்லிருந்தால் கூட

பிரியமாக பிரிந்து இருப்பேன் ....


பிடித்தவன் வேறு ஒருவன் என்று சொன்னதும்


தானே பெண்ணே ///////


பித்து பிடித்தவனாக மாறி விட்டேன் .........

வாழ்க்கை

வாழ்க்கையை துரத்தி பிடிக்க நினைத்து

துயர படுகிறோம் ......வாழ்க்கை சொல்கிறது


நிதானமாக இரு ////


நியாயாதுடன் வெற்றியும் கிடக்கும் என்று .......

மவுன அஞ்சலி...

இறந்த பின்புதான்
மவுன அஞ்சலி செலுத்துவார்கள்.
நான் உயிரோடு இருக்கும் போதே
நீ எனக்கு முன்னால்,என்னோடு பேசாமல்
மவுன அஞ்சலி செலுத்துகிராயே...

நட்பு...

ஒவ்வொரு முறையும்
காதலில் தடுக்கி விழும்போது
தாங்கி பிடிப்பது "நட்பு" மட்டுமே...

நேரங்கள் தான் அதிகம் !

அவளை பிரிந்தபிறகு
நான் தூங்கிய இரவுகளைவிட
கண்கள் கலங்கிய இரவுகள் தான் அதிகம் !

தனிமையில் இருந்த நாட்களைவிட

தவித்திருந்த நாட்கள் தான் அதிகம் !

படித்திருந்த நிமிடங்களைவிட

துடித்திருந்த நிமிடங்கள் தான் அதிகம் !

பசியோடு இருந்த நேரங்களைவிட

பசியை மறந்திருந்த நேரங்கள்தான் அதிகம் !

நினைவோடு இருந்த நேரங்களை விட

அவள் நினைவோடு
இருந்த நேரங்கள் தான் அதிகம் !

புரிந்துக் கொள்ளுங்கள்

பூக்களை சுற்றி தேனீக்கள் சுற்றுவது
பூவுக்குள் தேன் இருக்கிறது என்று
ஈ களுக்கு தெரியும் அதனால் சுற்றுகிறது
ஆனால் ? அவளிடம்
காதல் என்ற வார்த்தைக்கே
அர்த்தம் தெரியாத பொழுது
ஏன் ? எதற்காக ?
அவள் பின்னாடி சுற்ற வேண்டும் !...

இது தான் காதலா?

காதலிக்கிறேன்!என்னை ஈரைந்து
மாதம் கருவில் சுமந்தவளை!
அதனால் தானோ அவளை
தண்டிக்கிறேன் சிறுவயது முதல்!
ஏனோ இதை அத்தனையும்
தாங்கிக் கொள்கிறாள்
இதற்காகவே பிறந்தவள் போல்!
புன்னகையை மட்டுமே ஏந்துகிறவள்
இன்று துயரத்தில் அமிழ்ந்துவிட்டாள் என்னால்!
இருந்தும் வாயெடுத்துப் பேசவில்லை
என் மனம் புன்னாகிவிடுமே என்று!
அந்த மௌனமே என்
நெஞ்சை கொன்றுவிட்டது
மறு ஜென்மம் எடுத்தவனைப்
போல் உணர்கிறேன்!
இம்முறை என் அன்னையை
நான் சுமக்கிறேன் என் நெஞ்சில்!

பொறுமை .........

"மழை போல்
நீ எப்போதாவது
தான் பேசுகிறாய் .....!

ஆனாலும் .....


"நிலம் போல் நான்

எப்போதும் காத்திருப்பேன்"

"உன் அன்பு மழைக்காக"