ஏதோ ஒரு சோகம்
புரியாத வழியோடு
புறப்பட்டு விட்டேன்
ஏழ்மையின் காரணமாய்!
பணம் மட்டும் வாழ்கை
என்று வாழும் இந்த
காலகட்டதில் ஏழ்மையின்
கைப்பிள்ளையாய் நான்!
ஆசைகள் மட்டும் ஓராயிரம்
இருந்தும் என்ன பயன்
அதை செயல்படுத
இவனிடம் பொருளில்லையே!
இந்த ஏழ்மையின்
வாசலில் நான் மட்டும்
செல்லப்பிள்ளையாய்
பிறந்து விட்தேன்!
அது பாசம் காட்டுவதால்
நான் பட்டினிகிடக்கிறேன்
அது அன்பு காட்டுவதால்
நான் அழுது தீர்க்கிறேன்!
ஏழ்மையின் காரணமாய்
இன்று என் கண்ணீர்துளிகள் கூட
எனக்கு சோந்தமில்லாமல்
போனதோ!
விரக்தி கொண்ட நான்
இன்று வீர வண்க்கம்
எழுதுகிறேன்: நாளை இது
என் காலச்சுவட்டில் பதிவாகட்டும்...
No comments:
Post a Comment